தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , ஏற்படும் சில நன்மைகள்

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , ஏற்படும் சில நன்மைகள்...

1.தமிழகத்தில் 32 மாவட்டங்களை இரு மாநிலமாக பிரித்தால், மாநில அரசு, நிர்வாகம் (ஆட்சி) செய்ய ஏதுவாக இருக்கும்.
2.சட்டமன்ற வரவு செலவு திட்டத்தின் போது ( Legislative Budget) நலத்திட்ட உதவிகள்,  மாவட்டங்களுக்கு எளிதில் போய் சேர வாய்ப்புண்டு (திட்டம் போட்டால், போய் சேரலாம் !? ).

3.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் போது எல்லா மாவட்டங்களுக்கும் நலத்திட்டங்கள் பயன்பட வாய்ப்புள்ளது.

4.நீதிமன்றங்கள், காவல்துறையின் அமைப்பும், செயல்பாடும் எளிதாக இருக்கும். 

5.மாநிலம் பிரிவதால் மேலும் ஒரு புதிய தலைநகரம் உருவாகும். தொழிற்முறையிலும், கல்வியிலும் மற்ற எல்லாவற்றிலும் சென்னைக்கு இணையாக முன்னேறி விடும். 

9.புதிய தலைநகரத்திற்கு அருகே உள்ள மாவட்டங்கள், சிறிய நகராட்சிகள் வெகுவாய் முன்னேறும். அங்குள்ள மனையின் மதிப்பு 20 முதல் 80 சதவிகிதம் வரை ஏறிவிடும்.  

7  புதிய மாநிலத்தில், புது தொழிற்சாலைகள், பல்கலைகழகங்கள் மற்றும் பல நல்ல திட்டங்கள் ஆரம்பிக்கப்படலாம்

9. புதிய ரயில் முனையங்கள் தொடங்கப்படும்; மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்கப்படும்.

10.அடுத்து மிக முக்கியமானது, சேது சமுத்தர திட்டம் மீண்டும் எழுச்சி பெற்று ஆரம்பிக்கப்படும். மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் போது, தென்னக அரசு, மத்திய அரசுடன் சேர்ந்து சேது சமுத்தர திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய சிறுசிறு துறைமுகங்கள் சர்வதேச துறைமுகங்களாக மாறும். இதனால் அந்த மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி அடையும்.

11.தென்கோடியில் உள்ள மாவட்டங்கள், தலைநகரில் மனு கொடுக்கவோ அல்லது மாவட்ட பிரச்னையை பற்றி பேசவோ 600/ 700 கீ.மீ பயண பட வேண்டியதில்லை. 

Comments

Popular posts from this blog

வட தமிழ்நாடு எங்கள் நாடு

வடதமிழகம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரம் இதோ